அடுத்தடுத்து அதிர்ச்சி: காலியில் மேலுமொரு கொரொனா தொற்றாளர்!

காலியில் மேலுமொருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரும் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் ஆலோசகராக செயற்பட்டுள்ளார்.

தற்போது, இலங்கையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,464 ஆக அதிகரித்துள்ளது.

காலி, ஹபரதுவ பகுதியில் அடையாளம் காணப்பட்ட 35 வயதான இவர் தற்போது ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவர் தாய், மனைவியுடன் ஹபரதுவ பகுதியில் வசித்து வந்துள்ளார்.

அவரது வீட்டை சுற்றியுள்ள வீடுகளை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஆலாசகரின் மனைவி ஒரு ஆசிரியர் என்றும் அவர் கோனாபினுவல பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியையாவார்.

ஆசிரியர் இரண்டு நாட்களாக பாடசாலை கடமையில் இருந்தார் என்றும், அவரது பி.சி.ஆர் சோதனை அறிக்கைகள் வரும் வரை அவருடன் நெருங்கி பழகிய 25 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here