பாதிக்கப்பட்டவர்கள் நேரில் பார்க்க வேண்டுமென்பதற்காக மரணதண்டனையை தள்ளி வைத்த நீதிபதி!

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தின் சமஷ்டி நீதிபதி ஒருவர் கொரோனா வைரஸ் பரவலை முன்னிட்டு உறவினர்கள் கோரிக்கையை ஏற்று மரண தண்டனையை இப்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளார்.

அதாவது அமெரிக்காவில் கொடூரக் கொலைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கபடும் போது குற்றவாளியினால் பாதிக்கப்பட்ட உறவினர்களுக்கு மட்டும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைப் பார்க்க சிறப்பு அனுமதி அளிக்கப்படும்.

டானியல் லீ, இவர் 1999ஆம் ஆண்டு தம்பதியினரையும் இவர்களது 8 வயது மகளையும் கொடூரமாகக் கொலை செய்ததற்காக மரண தண்டனை பெற்றார்.

வரும் திங்களன்று இவருக்கு ஊசி ஏற்றி மரண தண்டனை அளிக்கப்படுவதாக இருந்தது.

இந்நிலையில் கொலையாளி டானியல் லீயினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் சிலர் டானியல் லீ சாவதைப் பார்க்கும் உரிமை எங்களுக்கு உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிற்கும் வரை அவரது மரண தண்டனையை தள்ளி வைக்க வேண்டும். இப்போது கொரோனா காலத்தில் எங்களால் மரண தண்டனை நிறைவேற்றத்தைப் பார்க்க முடியாது, எனவே ஒத்தி வைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர்.

இதனையடுத்து மாவட்ட தலைமை நீதிபதி ஜேன் மக்னஸ் ஸ்டின்சன் மரண தண்டனை நிறைவேற்றத்தை ஒத்தி வைத்தார். 17 ஆண்டுகளில் இப்படி நடப்பது இதுவே முதல்முறை.

ஆனால் இவரது உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்க நீதித்துறை நீதிபதி மேக்னஸிடம் முறையிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here