பலாலி தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து 100 பேர் விடுவிப்பு!

கொரோனா தொற்று காரணமாக யாழ்ப்பாணம் பலாலி விமானப்படைத்தளத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 100 பேர் குணமடைந்து இன்றைய தினம் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 26ஆம் திகதி தங்க வைக்கப்பட்டிருந்த குறித்த 100 பேரும் 14 நாட்கள் நிறைவடைந்து இன்றைய தினம் சுய தனிமைப்படுத்தல் இருந்து விடுவிக்கப்பட்டு சொந்த இடங்களுக்கு விமானப்படையின் வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்கள் கொழும்பு கண்டி மற்றும் அனுராதபுரம் உள்ளிட்ட கொழும்பில் சில மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இவ்வாறு சுய தனிமைப்படுத்தி உட்படுத்தப்பட்டு தோற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதன் பின்னர் அன்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here