கிளிநொச்சி இளைஞனின் உள்ளாடைக்குள் சிக்கிய கொழும்பிலிருந்து வந்த ‘பொருள்’: வரிசையாக சிக்கிய ஆறு பேர்!

கிளிநொச்சி, தர்மபுரம் பொலீஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் ஹேரோயின் போதைப் பொருளுடன் ஏழு சந்தேக நபர்களை பொலீஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (10) மாலை 6.40 மணியளவில் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் வைத்து 31 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் 100 கிராம் ஹெரோயின் தூளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வத்தளை பகுதியிலிருந்து விற்பனை செய்வதற்காக கிளிநொச்சி கொண்டுவரப்பட்டள்ளது. சந்தேக நபர் தனது உள்ளாடைக்குள் பொலீத்தின் பையினாள் சுற்றி மறைத்திருந்த நிலையிலேயே பொலீஸாரினால் பிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இரவு 10.45 அளயில் தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றிற்குள் இருந்து ஆறு இளைஞர்கள் 290 மில்லிக் கிராமம் ஹெரேயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் 19 தொடக்கம் 23 வயதுக்குட்ப்பட்டவர்கள். பொலீஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கிளிநொச்சி பிரதிப் பொலிஸ்மா அதிபரின் விசேட பிரிவினரினால் இவர்கள் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேட்கொண்டுவருகிறார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here