நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் 170 பேருக்கு முடி திருத்தினார்!


நேற்று அடையாளம் காணப்பட்ட 300 கொரோனா தொற்றாளர்களில், வெலிக்கடை சிறைக்கைதியொருவரும் உள்ளடங்குகிறார். வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து அடையாளம் காணப்பட்ட இரண்டாவது கைதி இவர்.

சிறைச்சாலையில் முடி திருத்தும் பணியில் இவர் ஈடுபட்டிருந்தார். அண்மை நாட்களில் இவரிடம் சுமார் 170 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், கைதிகள் தலைமுடி திருத்தியுள்ளனர்.

அவர்கள் அனைவரிடமும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலையின் மருத்துவமனையில் அனைத்து பணியாளர்கள், மற்றும் சிகிச்சை பெறும் கைதிகள் இன்று காலையில் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here