மக்களின் இலகு போக்குவரத்துக்காக பிரமந்தனாறு வீதிகள் சீரமைப்பு

கிளிநொச்சி நகரம்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு, மயில்வாகனபுரம், கொளுந்துபுலவு பிரதேசங்களின் உள்ளக வீதிகள் மக்ளின் இலகு போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் சீரமைக்கப்பட்டு வருகிறது.

நீண்ட காலமாக குறித்து பிரதேசங்களின் வீதிகள் புனரமைக்கப்படாது இருந்து வந்த நிலையில் குறித்த வட்டார பிரதேச சபை உறுப்பினர்களான செல்வரானி மற்றும் இராமலிங்கம் ஆகியோரின் நடவடிக்கைகளுக்கு அமைவாக கரைச்சி பிரதேச சபையால் கனரக வாகனங்கள் மூலம் தற்காலிக ஏற்படாக சில வீதிகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான மேற்படி பிரதேசங்கள் பல்வேறு உட்கட்டுமான குறைபாடுகளுடன் காணப்படுகின்ற பிரதேசங்களாகும் இங்கு வீதி போக்குவரத்தே மிக முக்கிய பிரச்சினையாக இருந்து வந்த நிலையில் தற்போது அவை தற்காலிகமாக சீரமைக்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here