வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் திடீரென உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிலாபம் முந்தல் வைத்தியசாலையில் இன்று காலையில் 22 வயதான இளைஞன் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகம் வைத்தியர்களிற்கு ஏற்பட்டது.

உடனடியாக அவர் சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும், சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.

இறந்தவரிடமிருந்து எடுக்கப்பட்ட உயிரியல் மாதிரிகளை பி.சி.ஆர் பரிசோதனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக வைத்தியர் மஹாலிங்கம் பாஸ்கரன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here