UPDATE: இன்று மட்டும் 293 பேருக்கு கொரோனா தொற்று!

இன்றுமேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இன்று மட்டும் 293 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இலங்கையில் மொத்தம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,447 ஆக உயர்ந்துள்ளது.

—————————————————————-

இன்று 283 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இருந்து இன்று மேலும் 87 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை கந்தக்காடு முகாமில் இருந்து 340 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நீதி அமைச்சின் கீழ் உள்ள கந்தக்காடு மற்றும் சேனபுர பகுதிகளில் உள்ள இரண்டு போதைப்பொருள் புனர்வாழ்வு மையங்களில், புனர்வாழ்வு பெறுபவர்கள் மற்றும் ஊழியர்கள் என சுமார் 1150 பேர் உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து நடத்தப்படும் சோதனையில் மேலும் தொற்றாளர் எண்ணிக்கை எகிறும் என அஞ்சப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here