ஒவ்வொரு கிலோமீற்றருக்கும் 10 ரூபா மானியம் கோரும் தனியார் பேருந்துகள்!

அரசாங்கத்திடமிருந்து மானியம் கிடைத்தாலே, தனியார் போக்குவரத்து துறை நெருக்கடியின்றி செயற்படுமென்று, அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

கொரோனாவிற்கு பின்னரான காலத்தில் தனியார் பேருந்து தொழிற்துறையை சேர்ந்த சுமார் 600,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தனியார் பேருந்துகளிற்கு ஒவ்வொரு கிலோமீற்றருக்கும் 10 ரூபா வீதம் வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் தற்போது நாளாந்தம் 1,500 ரூபா லாபமே ஈட்டுவதாகவும், இதில் 1,000 ரூபா பேருந்து செலவினத்திற்கு சென்று விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here