கந்தக்காடு முகாமிலிருந்தவர்களின் உறவினர்கள் 119 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் 119 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் புனர்வாழ்வு மையத்தில் தங்கியிருந்தவர்களை உறவினர்கள் பார்வையிட அனுமதிக்கப்படவில்லை என்று இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இன்றும் 194 பேர் பிசிஆர் பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளனர்.

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து வீடு திரும்பிய 50 பேர் ஹெந்தல வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சேனாபுரவில் தங்க வைக்கப்பட்டுள்ள 144 பேரும் இன்றும் சோதனைக்குட்படுத்தப்படவுள்ளனர்.

புனர்வாழ்வு மையத்தின் உத்தியோகத்தர்கள் கட்டுக்கெலிய பகுதியிலுள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here