நேற்று 60 பேருக்கு தொற்று!

இலங்கையில் நேற்று 60 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்படி, நாட்டின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,154 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 164 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,979 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இதேவேளை, கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலுள்ளவர்களை பார்வையிட வந்த உறவினர்களைக் கண்டறியும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ளது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட நபர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பலரும் இந்த மையத்திற்கு வருகை தந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவுத் தலைவர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

பார்வையிட வந்த உறவினர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களை பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

அந்த மைத்தில் ஆலோசகராக பணிபுரிந்த 27 வயதான யுவதியும் தொற்றுடன் அடைாளம் காணப்பட்டிருந்தார்.

அவர் சுகவீனமுற்ற நிலையில் தனியார் வைத்தியநிலையம், பக்கத்து வீடு, தையல் நிலையத்திற்கு சென்றிருந்தார்.

மையத்திலிருந்து வீடு திரும்ப அவர் போக்குவரத்து சேவையை பயன்படுத்தியிருந்தார். எனினும், முகக்கவசம் அணிந்தே அவர் பயணித்திருந்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here