கள்ளவாக்கு: முறைப்படி முறையிட்டால் சிறிதரன் கைது; தேர்தல்கள் ஆணையாளர் அதிரடி!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குறிப்பிட்ட கள்ளவாக்கு விவகாரத்தில், யாராவது உரிய வகையில் முறைப்பாடு செய்தால், சிறிதரன் கைது செய்யப்படும் நிலை உருவாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தான் 75 கள்ளவாக்கிட்டதாக சி.சிறிதரன் ஊடக பேட்டியொன்றில் குறிப்பிட்டிருந்தார். விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தும் விதமாக சிறிதரன் நூதனமாக கருத்து தெரிவிக்கிறார் என சமூக ஊடகங்களில் விமர்சனம் கிளம்பியிருந்தது.

இந்த நிலையில் பத்திரிகையாளர்களுடன் நேற்று தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர் சந்தித்து பேசினார். இதன்போது எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளிக்கும்போது, மேற்படி கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறிதரன் விவகாரம் பற்றி தற்போதுதான் கேள்விப்படுகிறேன். இந்த விடயம் தொடர்பில் உறுதியான முறைப்பாடு தெரிவிக்கப்பட்டால் அவரை கைது செய்து விசாரிக்கும் நிலைமை ஏற்படும்.

2004ஆம் ஆண்டு தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டு வந்தது. ஆனால், தற்போதுதான் இந்த விடயம் தொடர்பில் அறிகிறேன். எனது பேஸ்புக் பக்கத்திலும் இது பற்றி கேள்வியெழுப்பியிருந்தனர்.

ஆனந்தசங்கரி அண்ணர் 2004ஆம் ஆண்டு தேர்தல் பற்றி பல முறை குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்தார். எனவே இந்த விடயம் பற்றி யாராவது முறையிட்டால் விசாரிக்கலாம் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here