கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து கொரோனா சமூகத்தொற்றாக மாறும் அபாயம்?

கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்திலிருந்து கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், முறையான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் இது சமூகத்திற்குள் பரவும் அபாயமுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்ட கைதியை தொடர்ந்து, கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 56 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

அந்த மையத்தில் பணிபுரிந்த ஆலோசகர் ஒருவரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.

சுகவீனமடைந்த நிலையில் அவர் ஒரு தனியார் மருத்துவ நிலையத்திற்கு சென்றதும், பக்கத்த வீடு, ஆடையகம் என்பவற்றிற்கு சென்றதும் தெரிய வந்துள்ளது.

புனர்வாழ்வு மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் விடுமுறை நாட்களில் வீட்டிற்குச் சென்றுவிட்டதாகவும், கொரோன தொற்று செய்தியையடுத்து அங்குள்ள தமது பிள்ளைகளை பார்வையிட பெற்றோர் வருவதாகவும், இதன் மூலம் வைரஸ் சமூகமயமாக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

ஆலோசகருடன் பழகிய சிலாபம், கொஸ்வத்தையை சேர்ந்த 42 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here