சாவகச்சேரியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டவர்களிற்கு நேர்ந்த கதி!

நடைப்பயிற்சியில் ஈடுபட்டவர்கள் மீது மதுபோதையில் வந்தவர் மோதிய விபத்தில்3 பேர் காயமடைந்துள்ளனர்.

ஏ9 வீதி, சாவகச்சேரி பகுதியில் இன்று (9) இரவு இந்த விபத்து சேர்ந்துள்ளது.

சாவகச்சேரியிலிருந்து யாழ்ப்பாண திசையாக ஏ9 வீதியால் இருவர் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்தவர் அவர்கள் மீது மோதினார்.

இதில் மூவரும் காயமடைந்தனர்.

மருதங்கேணி பிரதேசசெயலக உத்தியோகத்தரான மதிதரன் என்பவர் கால் முறிந்த நிலையிலும், தவராசா பாஸ்கரன் (43) என்பவர் தலையில் காயமடைந்த நிலையிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற, யாழ்ப்பாணத்தை சேர்ந்த வர்த்தக நிலைய உரிமையாளரான சண்முகநாதன் பிரதீபன் (38) என்பவரே அவர்கள் மீது மோதினார். விபத்தின்போது அவர் மதுபோதையில் இருந்தார்.

அவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here