யாழ் ரௌடிகளிடமிருந்து மீட்கப்பட்ட பயங்கர ஆயுதங்கள்!

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்துக்கு முன்னால், நேற்று (08) உத்தியோகத்தர் ஒருவர் மீது வாள்வெட்டு மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் ஐந்து ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மல்லாகத்தில் வைத்து நேற்று (08) இரவு இவர்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் 30 வயதுக்குட்டவர்கள். இவர்கள் முன்னர் அளவெட்டியை சேர்ந்த கனி என்ற ரௌடிக்குழுவுடன் இயங்கி, பின்னர் மல்லாகத்தில் தனித்து இயங்கி வந்தனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து, வாள்கள் 2, கைக்கோடரி 1, மோட்டார் சைக்கிள்கள் 2, முச்சக்கர வண்டி 1 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான மருதனார் மடத்தைச் சேர்ந்த ஜெகன் என்றழைக்கப்படும் கைலாயம் என்பவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், மேற்குறிப்பிட்ட வாள்வெட்டு வன்முறைக் கும்பல் தமது பதுங்குமிடமாக பயன்படுத்திய நீர்வேலி – கரந்தன் பகுதியில் உள்ள வீடொன்றைப் பொலிஸார் சுற்றிவளைத்தனர்.

அவ்வீட்டில், சோதனை மேற்கொண்ட பொலிஸார், வீட்டினுள் இருந்தும் வீட்டின் பின் பகுதியில் உள்ள வாழைத் தோட்டத்தில் இருந்தும் கைக்குண்டு 1, வாள்கள் 3, மோட்டார் சைக்கிள்கள் 2, இராணுவச் சீருடைகள், தேசிய அடையாள அட்டைகள் உள்ளிட்ட பொருள்களைக் கைப்பற்றியுள்ளனர்.

இந்த வீட்டில் இந்தே, இக்கழுவினர் வாள் வெட்டுக்களை மேற்கொள்ள தயாராகிச் செல்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here