வரலாற்றில் முதல்முறையாக 24 கரட் தங்கத்தின் விலை 100,000 ரூபாவாக உயர்ந்தது!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தங்கத்தின் விலை உச்சபட்ச அளவை எட்டியது. 24 கரட் தங்கத்தின் விலை முதன்முறையாக 100,000 ரூபாவை எட்டியது.

கொரோனா தொற்று காரணமாக தங்க வரத்து நின்று போனதால் நாட்டில் தங்கத்திற்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் விலை உயர்ந்து செல்வதாக தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகாரசபை வட்டாரங்கள் தெரிவித்தன.

22 கரட் தங்கத்தின் விலை 93,000 ரூபாவாக இன்று உயர்ந்தது.

கொரோனா தொற்று ஆரம்பிம்பித்த சமயத்தில் ரூபா 82,000 முதல் 84,000 வரை இதன் விலை காணப்பட்டது.

நிலவும் சூழ்நிலைகளை பொறுத்து விலை மாறுபடும், தங்க வரத்து தொடர்ந்து தடைப்பட்டிருப்பின் விலை மேலும் உயரும் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here