தாயைப் பிரிந்த யானைக்குட்டி மீட்பு!


வவுனியா பூவரசன்குளம் பகுதியில் தாயை இழந்து தனிமையிலிருந்த யானைக்குட்டி ஒன்று நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா பூவரசன்குளம் வேலன்குளம் பகுதியில் மூன்று மாதம் நிறைந்த யானைக்குட்டி ஒன்று நேற்று மாலை தனிமையில் அப்பகுதியில் இருப்பதை கண்ட சிலர், பூவரசங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கினார் .

இந்நிலையில் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் அங்கு சென்று யானைக்குட்டியை மீட்டுள்ளதுடன் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் கிரித்தலை யானைகள் சரணாலயத்திற்கு மீட்கப்பட்ட யானைக்குட்டியை கொண்டு செல்லவுள்ளதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவித்துள்ளனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here