கோட்டா, மஹிந்த நிகழ்களிற்கு அனுமதி; இந்துக்களின் யாத்திரைக்கு மட்டும் தடையா?: கொதிக்கும் பிக்கு!

இந்து பக்தர்களை அழைத்துக் கொண்டு நான் கதிர்காம பாதயாத்திரை செல்லவுள்ளேன். என்னை யாராலும் தடுக்க முடியாதென தெரிவித்துள்ளார் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர்.

அவர்மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி, பிரதமருக்கு தினமும் பல நிகழ்வுகளிற்கு அழைக்கப்படுகிறார்கள். அவர்களும் கலந்த கொள்கிறார்கள்.கொரோனாவை கட்டுப்படுத்தும் சுகாதார விதிகளிற்கு இது பொருந்துமாக இருந்தால், அந்த நிகழ்வுகள் தடை செய்யப்படாமல் அனுமதிக்கப்படுமாக இருந்தால், கதிர்காம பாதயாத்திரையையும் அனுமதிக்க வேண்டும். நாட்டு மக்கள் இந்த சம்பவங்களையெல்லாம் அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தாம் நம்பிக்கை வைத்துள்ள முருகக்கடவுளிடம் இந்துக்கள் பாதயாத்திரை செல்வதில் என்ன தவறு? ஒரு அரசியல் கூட்டத்தை விட, தான் நம்பும் கடவுளிடம் பக்தன் கால்நடையாக செல்வதில் பிரச்சனையில்லை.

இந்த நாட்டில் பௌத்தர்களிற்கும், இந்துக்களிற்கும் சமநீதி இருக்க வேண்டும். கதிர்காம பாதயாத்திரை தொன்று தொட்டு நிகழ்வது. அந்த நிகழ்வை கட்டுப்படுத்துவது தவறானது என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here