வடக்கில் நாளை மின்சாரம் தடைப்படும் இடங்கள்!

உயர்அழுத்த மற்றும் தாழ்அழுத்த மின்விநியோக மார்க்கங்களில் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளிற்காக வடக்கின் பல பகுதிகளில் நாளை (9) வியாழக்கிழமை மின்சாரம் தடைப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது.

இதன்படி நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை,

யாழ் மாவட்டத்தில்- மந்திகை உபயகதிர்காமம், வல்லிபுரம், வல்லிபுரம் தேசிய நீர்ப்பாசனசபை ஆகிய இடங்களிலும்,

வவுனியா மாவட்டத்தில்- சமணன்குளத்திலும்,

மன்னார் மாவட்டத்தில்- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் கொக்குப்படையான், கொண்டச்சி கிராமம், மறிச்சுக்கட்டி, முள்ளிக்குளம், கரடிக்குழி, பாலக்குழி, முள்ளிக்குளம் கடற்படை முகாம், சிறுநாவற்குளத்தில் இருந்து தலைமன்னார் வரையும் மின்சாரம் தடைப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here