கிழக்கு தொல்லியல் செயலணிக்கு இருவரை கோட்டா கோரியுள்ளாராம்!

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கான பிரதிநிதிகளின் சிபார்சுகளை வழங்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரியுள்ளார்.

கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணியின் உறுப்பினர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்றையதினம் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நியமிக்கப்பட்ட கிழக்கு தொல்பொருள் செயலணியில் சிறுபான்மையினர் யாரும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருந்தது.

இதை சுட்டிக்காட்டி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இந்த கடிதத்திற்கு பதிலளித்திருந்த ஜனாதிபதி இரு சிறுபான்மையினரை இதத்துக்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்றையதினம் வெளியாகியிருந்தது.

இதையடுத்து குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியின் கவனத்திற்கு இன்றையதினம் கொண்டுசென்றிருந்ததை அடுத்து குறித்த பிரதிநிதிகளின் பரிந்துரைகளை தமக்கு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-அமைச்சின் ஊடகப்பிரிவு-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here