சிவாஜிக்கு தடைவிதிக்க மறுப்பு: பொலிசாரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்!

யாழ்ப்பாணம் நவாலி சென்பீற்றர் தேவாலத்திற்கு செல்வதற்கு எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மானிப்பாய் பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை மல்லாகம் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இன்று நண்பகல் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முற்படுகின்றமை, சென்பீற்றர்ஸ் தேவாலயத்திற்கு முன்பாக 150 இற்கும் அதிகமானவர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளமை போன்ற தகவல்கள் தமக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்து மானிப்பாய் பொலிஸார் மல்லாகம் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

அதேவேளை அவரை அங்கு செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர். நீதிமன்றம் அதை நிராகரித்தது.

சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் குண்டுவீச்சில் கொல்லப்பட்டவர்களின் நினைவுநாள் நாளை அனுட்டிக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here