ஒரே பிரசவத்தில் இரட்டை குட்டிகளை ஈன்ற யானை!

மின்னேரியா தேசிய பூங்காவிலுள்ள யானை ஒன்று இரண்டு குட்டிகளை ஒரே பிரசவத்தில் ஈன்றுள்ளது.

இலங்கையில் யானை ஒன்று ஒரே பிரசவத்தில் இரண்டு குட்டிகளை ஈன்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் தாரக பிரசாத் தெரிவித்துள்ளார்.

குறித்த குட்டிகள் பிறந்து மூன்று அல்லது நான்கு வாரங்களே இருக்குமெனவும் மின்னேரியா பூங்காவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு, முன்னதாக, 2018 ஆம் ஆண்டில் மதுரு ஓயாவின் அருகே ஒரே பிரசவத்தில் ஈன்ற இரண்டு இரட்டை யானைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அவை பிறக்கும்போதே இறந்து விட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here