மட்டக்களப்பு மசாஜ் நிலையத்திற்கு ஏற்பட்ட கதி!

மட்டக்களப்பு பாசிக்குடாவிலுள்ள உடற் பிடிப்பு நிலையம் (ஸ்ப்பா) ஒன்றில் நேற்று இரவு (செவ்வாய் கிழமை) (7) திடீரென ஏற்பட்ட தீயினால் கட்டடம் ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மட்டக்களப்பு நகர சபை தீயனைப்பு படையினர் கல்குடா பொலிசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஈடுபட்டனர். இதனால் தீயானது மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.

மேற்குறித்த நிலையத்தில் தீயானது பரவியமைக்கான காரணம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் அங்கிருந்த பெறுமதி வாய்ந்த பொருட்க்கள் சில தீயில் எரிந்துள்ளது.இவ் தீ விபத்தினால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லையென பொலிசார் மேலும் தெரிவித்தனர்.தீ பரவலை தொடர்ந்து பிரதேசத்தில் சற்று நேரம் பதற்ற நிலை ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here