சுயாதீன தேர்தலுக்கு பொலிசாரின் முழு ஒத்துழைப்பு!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை சுயாதீனமாகவும் நியாயமாகவும் நடாத்துவதற்கு பொலிசாரின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும் என்கிறார் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்.

யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் குறித்த கூட்டத்தில் கருத்து தெரிவித்த யாழ்ப்பாண பிரதி பொலிஸ் மாஅதிபர், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை சுயாதீனமாகவும் நியாயமாகவும் நடத்துவதற்கு தேர்தல் திணைக்களத்துடன் இணைந்து பொலிசார் செயற்படுவதற்கு தயாராக இருக்கின்றோம்.

அதாவது மாவட்ட உதவி தேர்தல் அலுவலகத்தால் வழங்கப்படுகின்ற பணிப்புரைக்கமைய எமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக மாவட்ட பொலிசாருக்கு என்னால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் நாங்கள் தற்பொழுது சட்டவிரோதமாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் தேர்தல் விளம்பர பதாதைகள் அகற்றல் மற்றும் தேர்தல் வன்முறையோடு சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். அதற்கென நியமிக்கப்பட்ட பொலிஸ் அணியினால் அது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.

அதேபோல் பொலிஸ் தலைமையகத்தினாலும் சில அறிவுறுத்தல்கள் எமக்கு வழங்கப்பட உள்ளன எனினும் எதிர்வரும் தேர்தலில் சுயாதீனமாகவும் நியாயமானதாகவும் நடத்துவதற்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தோடு பொலிசார் முழு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக உள்ளோம் இந்த விடயம் தொடர்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினை சார்ந்தவர்களுக்கும் மாவட்ட செயலகத்தினால் பல அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன எனவே குறித்த தேர்தலை நடத்துவதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here