கிழக்கு செயலணியில் மேலுமொரு பாதுகாப்பு தரப்பை சேர்ந்தவர்: மஹிந்தவையும் கோட்டா புறக்கணிப்பா?

கிழக்கு மாகாணத்தின் தொல்லியல் சின்னங்களை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக சிவில் பாதுகாப்பு படையின் இயக்குநர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பி.பி.ஜெயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு தொல்பொருள் செயலணியில் சிறுபான்மையினர் உள்ளடக்கப்படவில்லை, பாதுகாப்பு தரப்பினர் உள்ளடக்கப்பட்டது குறித்து உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கருத்து தெரிவிக்கையில், சிறுபான்மையினர் இருவர் இணைக்கப்படுவார் என தெரிவித்தார்.

எனினும், பிரதமரின் கருத்தின் பின்னர் வெளியான வர்த்தமானி அறிவிப்பில், சிறுபான்மையினர் உள்ளடக்கப்படாததுடன், மேலுமொரு பாதுகாப்பு தரப்பை சேர்ந்தவர் உள்ளடக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், தனது சகோதரனாகிய பிரதமரின் கருத்தையும், ஜனாதிபதி ஏற்கவில்லையா என்ற பரபரப்பான கேள்வி எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here