இனி பாடசாலை வாகனங்கள் மஞ்சள் வர்ணத்தில்!

பாடசாலை வாகனங்களிற்கு எதிர்காலத்தில் குறிப்பிட்ட வர்ண குறியீட்டை கட்டாயமாக்க தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகன உரிமையாளர் சங்கத்துடனான கலந்துரையாடலில் இதனை தெரிவித்துள்ளார்.

பாடசாலை வாகனங்களிற்கு வர்ண குறியீடு எதிர்காலத்தில் கட்டாயமாக்கப்படும் என தெரிவித்தார். பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்கள் அனைத்தும் மஞ்சள் வர்ணம் பூசப்பட வேண்டுமென தான் முன்மொழிந்துள்ளதாக தெரிவித்தார்.

எனினும் இதற்கு ஆகும் செலவீனம் பற்றி, வாகன உரிமையாளர்கள் சுட்டிக்காட்டினர். இதையடுத்து, தற்காலிகமாக வாகனங்களில் மஞ்சள் வர்ண கோடு இடுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், புதிய நாடாளுமன்றத்தில் இந்த விடயம் அங்கீகரிக்கப்பட்டு வர்த்தமானியிடப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here