பிரான்ஸில் முதல்முறையாக நகரசபை துணை முதல்வராக தெரிவான ஈழத்தமிழ் பெண்!

பிரான்சில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் ஈழத்தமிழர்கள் பலர் வெற்றியீட்டியுள்ளனர்.

95 ம் பிராந்தியத்தில் மீண்டும் துணை முதல்வராக செர்ஜியா மகேந்திரன் தெரிவாகியுள்ளார். மாநகரசபைத் தேர்தலில் 2 ம் சுற்றில் தெரிவாகிய பெனாய்ட் ஜிமெனெஸ் உடன் இணைந்து 50.84 % வாக்குகளை பெற்று, கடந்த 4ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

பிரான்சில் துணை முதல்வராக பதவியேற்ற முதல் ஈழத்தமிழர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த மாநகரசபைத் தேர்தலில் ஆதி பரமேஸ்வரி சதாசிவம் (பாண்டிச்சேரி) மற்றும் கார்த்திக் சந்திரமூர்த்தி ஆகியோரும் மாநகரசபை உறுப்பினர்களாக தெரிவு செய்யபட்டனர்.

93ம் பிராந்தியத்தில் தமிழர்கள் செறிந்து வாழும் நகரில் ஒன்றான லா கூர்நெவ் நகர சபை உறுப்பினர்களாக ஈழத்தமிழர்களான சுகுர்ணா சிறிகணேசன், யாழினி சந்திரராசா, சபரினா கணேஸ்வரன், கிங்ஸரன் ஞானநாயகம் ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here