போனில் அதிகநேரம் விளையாடியதால் 11 வயது மகனை கொலை செய்த தாய்

அலெக்ஸாண்ட்ரா டகோகென்ஸ்கியும் ரஃபேலும்

பிரேசிலைச் சேர்ந்த அலெக்ஸாண்ட்ரா டகோகென்ஸ்கி  என்னும் 33 வயதான விவாகரத்தான இரண்டு குழந்தைகளின் தாய், தன்னுடைய பதினொரு வயது  மகனான ரபேலை, அவன் அதிகநேரம் போனில் விளையாடிக்கொண்டிருப்பதனால் எரிச்சலுற்று  கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

முதலில் தனது மகன் வீட்டை விட்டு ஓடிவிட்டதாக நாடகமாடிய அலெக்ஸாண்ட்ராவின் பேச்சை நம்பிய பிரேசில்  காவல்துறையினர் அவரது வீட்டை அண்டிய காட்டுப் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் சிறுவனைக் கண்டுபிடிக்கமுடியாததால் தேடுதலை கைவிட்டதாக அறிவித்தனர்.

ஆனால் எதிர்பாராத திருப்பமாக அலெக்ஸாண்ட்ரா அவரது மகனைத் தானே கொலைசெய்து விட்டதாக வாக்குமூலமளித்தார். ரஃபேலுடைய  சடலம் அவரது வீட்டிலிருந்து 5 மீட்டர் தொலைவிலிருக்கும் அண்டை வீட்டில் அழுகிய நிலையில் காகிதப் பெட்டி ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்டது.

கொலை செய்யப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பாக ரஃபேல் தனது அம்மாவுக்கான  ஒரு கவிதையை இணையத்தில் பதிவுசெய்திருந்தார்.

அக்கவிதையில்  ரஃபேல் தன் தாயாரை தான் எவ்வளவு நேசிக்கிறார் என்றும்,  தன்னையும் தனது சகோதரரையும் அன்போடு கவனித்துக் கொள்வதற்காக  தாய்க்கு நன்றி தெரிவித்தும் பதிவு செய்திருந்தார்.

மேலும் அக்கவிதையில் ரஃபேல் தாயினுடைய புன்னகையே தனக்கு எல்லாமுமாக இருக்கிறது எனவும் எழுதியிருந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here