சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் சிறைப்பிடிப்பு: வடமராட்சி கிழக்கில் பதற்றம்!

வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் வெளியிடத்திலிருந்து வந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர்களை, பிரதேச மீனவர்கள் வளைத்துப் பிடித்து கரைக்கு கொண்டு வந்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான நிலைமை நீடிக்கிறது.

புத்தளத்தை சேர்ந்தவர்கள் உடுத்துறையில் தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் மக்கள் இதனால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், சட்டவிரோத மீன்பிடி முறைகளையும் அவர்கள் கையாள்வதால் மீன் வளம் விரைவில் அழிந்து விடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், இன்று சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த புத்தளம் மீனவர்களை, உடுத்துறை மீனவர்கள் இன்று மடக்கிப்பிடித்தனர். அவர்கள் தற்போது கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். இதனால் அஙகு பதற்றமான நிலைமை நீடிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here