சிறுபான்மையினரை தூக்கியெறிந்தது அரசு: தனிச் சிங்களவர்களுடன் கிழக்கு தொல்பொருள் செயலணி வர்த்தமானி!

கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணியின் உறுப்பினர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. எனினும், இந்த வர்த்தமானி அறிவித்தலிலும் சிறுபான்மையினர் யாரையும் அரசு உள்ளடக்கவில்லை.

ஏற்கனவே நியமிக்கப்பட்ட கிழக்கு தொல்பொருள் செயலணியில் சிறுபான்மையினர் யாரும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருந்தது. இதை சுட்டிக்காட்டி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இந்த கடிதத்தினால் எந்த பலனும் இருக்காது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

சில நாட்களின் முன்னர், பத்திரிகையாளர்களை சந்தித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, சிறுபான்மையினர் இந்த குழுவில் உள்ளடக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று அரசு வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலில், ஏற்கனவே அரசு வெளியிட்ட பட்டியலில் உள்ளடக்கப்பட்டவர்களே- தனிச்சிங்களவர்கள்- இடம்பெற்றிருந்தனர்.

பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண, எல்லாவல மேதானந்த தேரர், தொல்பொருள் பணிப்பாளர், காணிப்பணிப்பாளர் உள்ளடங்கிய 11 பேர் இ்த செயலணியில் பெயரிடப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here