கூட்டமைப்பை வெளியேற்றுவதே சர்வதேச விசாரணைக்கு சாவி!

கூட்டமைப்பை வெளியேற்றுவதே சர்வதேச விசாரணைக்கான சாவியாக அமையும். என்று வவுனியாவில் கடந்த 1236 வது நாளாக போராட்டம் மேற்கொள்ளும்காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

வவுனியாவில் இன்றயதினம் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

புதிய அரசியல் சாசனத்தை அதாவது அடிமை சாசனத்தை கொண்டு வருவதற்காகவே. தமிழர்களை பலவீனப்படுத்தி அரசியல் ரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் கொழும்பின் நிகழ்ச்சிநிரலில் சிந்திக்கவிடாமல் அடிமைவாக்களார்களாக கடந்த 11 பலவருடங்களாக கூட்டமைப்பு வைத்திருந்ததாக பெருமை கொள்கின்றது.

தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை நிராகரித்த சம்பந்தன் சுமந்திரன் குழுவினர்களை மக்கள் நிச்சயம் நிராகரிப்பார்கள். கூட்டமைப்பை வெளியேற்றுவதே சர்வதேச விசாரணைக்கான சாவியாக அமையும். இதை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நிறைவேற்றவேண்டும். என்று தெரிவித்தனர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமெரிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here