கட்டாரில் கொல்லப்பட்ட தாய், தந்தை, மகளின் சடலம் கொண்டு வரப்பட்டது!

கட்டாரில் கொலை செய்யப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரின் உடல்கள் உட்பட 7 உடல்கள் இன்று விமானம் மூலம் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

59 வயதான கணவன், 55 வயதுடைய மனைவி, 34 வயதான மகள் ஆகியோரின் சடலங்களே கொண்டு வரப்பட்டுள்ளன.

இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சடலங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த குடும்பத்தினர் கழுத்து நெரித்து கொல்லப்பட்டிருந்தனர். இவர்கள் களனி பகுதியை சே்ந்தவர்கள்.

இலங்கையிலிருந்து தொழில் நிமித்தம் கட்டாருக்கு சென்ற ஒருவர், உயிரிழந்த மகளுடன் காதல் தொடர்பை கொண்டிருந்தார். அவர்களிகிடையிலான காதல் உறவில் ஏற்பட்ட பிரச்சனைகளையடுத்து, காதலியையும் பெற்றோரையும் கொன்று விட்டு, மறுநாளே கொலையாளி இலங்கை தப்பி வந்து விட்டான்.

அடுத்தடுத்த நாட்களில் கொரோனா தொற்று காரணமாக விமான பயணங்கள் இடைநிறுத்தப்பட்டாால், சடலங்களை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது.

மற்ற 4 சடலங்களும், இயற்கை காரணங்களினால் உயிரிழந்தவர்களுடையது.

சடலங்கள் அனைத்தும் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here