யாழ்ப்பாணத்திற்கு எப்படி வந்தது சிறுத்தை?: ஆட்டுப்பட்டிக்குள் நுழைந்து வேட்டை!

யாழ்ப்பாணம் மாவைகலட்டி பகுதியில் வீட்டில் கட்டியிருந்த ஆடுகளை சிறுத்தைப் புலி கடிதத்தில் 13 ஆடுகள் காயமடைந்துள்ளதுடன் 6 ஆடுகள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் இன்று நடைபெற்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவை கலட்டிப் பகுதியில் இன்று காலை வீடு ஒன்றுக்குள் புகுந்த சிறுத்தை அங்கு கட்டப்பட்டிருந்த 19 ஆடுகளை கடித்துள்ளன. இதில் 13ஆடுகள் காயமடைந்துள்ளதுடன் 6 ஆடுகள் இறந்துள்ளன. சிறுத்தை கடித்துவிட்டு தப்பி சென்றுள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்றபடமை குறிப்பிடத்தக்கது.

யாராவது தரப்புக்கள் வளர்த்த சிறுத்தை தப்பி வந்து ஆடுகளை கடித்திருக்கலாமென கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here