ரஷ்ய பெண்ணுடன் அத்துமீறிய 5 பேர் கைது!

கொழும்பு, காலி முகத்திடலில் ரஷ்ய பெண்ணை துன்புறுத்திய விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துன்புறுத்தப்பட்ட ரஷ்ய பெண், இது தொடர்பில் வீடியோ மற்றும் புகைப்படத்தை தனது பேஸ்புக்கில் வெளியிட்டிருந்தார். சந்தேக நபர்கள் ரஷ்ய தம்பதியரை எவ்வாறு துஷ்பிரயோகம் செய்தார்கள் என்பதை இது காட்டுகிறது.

இந்த ரஷ்ய பெண் தனது காதலனுடன் காலி முகத்திடல் க்ரீனுக்கு வந்தபோது ஐந்து இளைஞர்கள் எல்லைமீறி நடந்துள்ளனர்.

இந்த ரஷ்ய பெண்ணின் காதலன் அதை நிறுத்துமாறு கூறியதையடுத்து, அவர்களால் தாக்கப்பட்டார். இதை வீடியோ எடுத்ததும், சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

சந்தேக நபர்கள் கொழும்பு 2 இல் வசிப்பவர்கள் என்று பொலிசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here