வாக்களிப்பு நேரம் நீடிப்பு!

எதிர்வரும் ஓகஸ்ட் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2020 பொதுத் தேர்தலில் வாக்களிப்பு ஓகஸ்ட் 5 ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசபிரிய அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்றினால் விதிக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களை அதிகாரிகள் மற்றும் வாக்காளர்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதனை கருத்திற் கொண்டே இந்த கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் பல ஆண்டுகளாக வாக்களிப்பு காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here