ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு தெரிவுப் பட்டியல் அரசியல்வாதிக்கு சென்றது எப்படி?: தேர்தல் அலுவலகத்திடம் கேள்வி

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பை வழங்கும் புதிய அரசின் திட்டத்திற்கு அமைவாக கடந்த சில மாதங்களுக்கு முன் நேர்காணல்கள் நடத்தப்பட்டு பொருத்தமானவர்கள் தெரிவு செய்யப்பட்டடிருந்தார்கள். இதன் போது அரசியல் செல்வாக்கு இருக்க கூடாது என ஐனாதிபதி கண்டிப்பான உத்தரவை பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த வேலைவாய்ப்பில் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் யாழ் தேர்தல் மாவட்டத்தில் தேசிய கட்சி ஒன்றில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கு கிடைக்கப்பெற்று அவர் தெரிவு செய்யப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு தனது யாழப்பாணம் மற்றும் கிளிநொச்சி அலுலகங்களுக்கு அவர்களை அழைத்து தானே குறித்த வேலைவாய்ப்பை தங்களுக்கு பெற்றுத் தர நடவடிக்கை எடுத்ததாகவும் எனவே இந்த தேர்தலில் தனக்கு வாக்களிக்குமாறும் கோரிவருகின்றார்.

எனவே இது தொடர்பில் பல இளைஞர்கள் தேர்தலில் போட்டியிடுகின்ற ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளின் கவனத்திற்குகொண்டு சென்றமைக்கு அமைவாக அவர்கள் குறித்த விடயத்தை மாவட்ட தேர்தல் அலுவலகத்திடம் சுட்டிக்காட்டியுள்ளதோடு, குறித்த பெயர் பட்டியல் எவ்வாறு குறிப்பிட்ட அரசியல்வாதிக்குச் சென்றது எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்தோடு அரசியல் தலையீடு இருக்க கூடாது என ஐனாதிபதி கண்டிப்பாக அறிவித்த பின்னரும் குறித்த வேட்பாளர் இந்த வேலைவாய்ப்பில் உண்மைக்கு புறம்பாக தகவல்களை வழங்கி அரசியல் செய்வதனை பலரும் கண்டித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here