பல்கலைகழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்களிற்கு கொழும்பில் மாடி வீட்டு கட்டிட தொகுதி!

அரசாங்க பல்கலைக்கழகங்களில் கற்பிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்காக சொந்தமாக வீடுகளை கொள்வனவு செய்வதற்கு வசதியாக மாடி வீட்டு கட்டிட தொகுதி ஒன்று கொழும்பில் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்கள் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் , உயர்கல்வி புத்தாக்க அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், பெரும்பாலான பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நீண்ட தூரங்களில் இருந்தே கடமைகளுக்கு வருகின்றனர்.

இவ்வாறு வருவோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இதனை கருத்தில் கொண்டு உத்தேச மாடி வீட்டு கட்டிட தொகுதியை கொழும்பு உருகொடவத்தையில் அமைப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here