கிளிநொச்சியில் 80 வீதமான வரவு!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 3 மாதம் மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் 115 நாட்களுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

கல்வியமைச்சின் அறிக்கையின்படி, சுகாதார வழிப்படுத்தலுக்கு அமைய இரண்டாம் கட்டத்தின் கீழ் இன்று (06.07.2020) பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 29ஆம் திகதி முதற் கட்டமாக பாடசாலைகள் திறக்கப்பட்டு கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அதிபர், ஆசிரியர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளித்திருந்தனர்.

இந்நிலையில் இரண்டாம் கட்டமாக தரம் 05, தரம் 11 மற்றும் 13ஆம் தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றப்பட்டு வெப்ப நிலைகள் பரிசோதிக்கப்பட்டு கைகள் கழுவி சுகாதார ஆலோசனைகள் வழங்கப்பட்ட பின்னர் கற்பித்தல்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

தரம் 05 மாணவர்களுக்கு காலை 7.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணிவரை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

அத்தோடு, தரம் 11 மற்றும் தரம் 13 மாணவர்களுக்கு காலை 7.30 தொடக்கம் மாலை 3.30 வரை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 3 மாதம் மூடப்பட்டிருந்த மீண்டும் இன்று ஆரம்பிக்கப்பட்ட போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வரவு எண்பது வீதமாக காணப்பட்டுள்ளது என கிளிநொச்சி வலயக் கல்வித் திணை்ககளம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here