பாராளுமன்ற தேர்தல் வெற்றியின் ஊடாக சிறைக்கதவுகள் உடைக்கப்பட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் வெளியில் வருவார் என வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவரை ஆதரித்து வாழைச்சேனை பேத்தாழை குகனேசன் கலாசார மண்டபத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்-
கடந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்துக் கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எங்களுடைய தமிழ் மக்களை குறிப்பாக கிழக்கு மக்களை போலி தேசியம், போலி உணர்வினை ஊட்டி ஏமாற்றிக் கொண்டு, திசை திருப்பிக் கொண்டு வந்திருந்த