யாழில் பாடசாலைகள் ஆரம்பம்

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் கற்றல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பித்துள்ளநிலையில், யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகளும் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று வழமைபோல் பாடசாலைக்கு மாணவர்கள் வருகை தந்ததோடு பாடசாலைக்குள் நுழையும் மாணவர்களின் வெப்பநிலை பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு சுகாதார நடைமுறையை பின்பற்றி பாடசாலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

நான்கு கட்டங்களாக பாடசாலைகளை இயங்க வைக்கும் அரசின் திட்டத்தின் கீழ், இரண்டாம் கட்டத்தின் கீழ் தரம் 05, 11, 13 மாணவர்கள் இன்று திங்கட்கிழமை பாடசாலைகளுக்குச் சமூகமளிக்க வேண்டும்.

02ஆம் கட்டத்தின் கீழ் மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகள், எதிர்வரும் 17ஆம் திகதி வரை இரண்டு வாரங்களுக்கு இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

01ஆம் கட்டத்தின் கீழ், அனைத்து அரசாங்க பாடசாலைகளும் கடந்த 29ஆம் திகதி திறக்கப்பட்டன.

ஜனாதிபதி செயலணிக் குழு அதிகாரிகள், அமைச்சரவை அமைச்சர்கள், உயர் கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு அதிகாரிகள், ஜனாதிபதி, கல்வி அமைச்சு ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடாலை தொடர்ந்து, சுமார் 3 மாதங்களின் பின் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.

இது தொடர்பான சுற்றறிக்கை தரம் 5, 11, 13 மாணவர்களைக் கோரும் வகையில் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

03ஆம் கட்டத்தின் கீழ் தரம் 10, 12 மாணவர்களுக்கு ஜூலை 20ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அத்தோடு, இது ஜூலை 24ஆம் திகதி வரை பாடசாலை இடம்பெறும்.

04ஆம் கட்டத்தின் கீழ் தரம் 03, 04, 06, 07, 08, 09 மாணவர்களுக்கு ஜூலை 27ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளினதும் தரம் 01, 02, முன்பள்ளிகளை எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி, திங்கட்கிழமை முதல் மீள திறப்பதற்கு, கல்விஅமைச்சு தீர்மானித்துள்ளது.

அத்துடன், கடந்த மார்ச்16 முதல் மூடப்பட்ட அனைத்து கல்வியியற் கல்லூரிகள், ஆசிரியர் கலாசாலைகளையும் ஜூலை 07ஆம் திகதி ஆரம்பிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here