மெண்டிஸ் இன்று நீதிமன்றத்தில்!


கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸ் இன்று பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

நேற்று காலை 5.15 அளவில் அவரது கார் மோதி சைக்கிளில் சென்று கொண்டிருந்த 64 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மொரட்டுவவில் இருந்து பாணந்துறை சென்று கொண்டிருந்த குசல் மெண்டிஸ் விபத்தில் சிக்கினார். விபத்து நடந்தபோது, காரில் இலங்கை அணியின் இன்னொரு வீரரான அவிஷ்க பெர்னாண்டோவும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவரு கார் மோதி மரணமடைந்த முதியவரின் உடல் நேற்று பாணந்துறை ஆதார வைத்திசாலையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

கார் விபத்திற்குள்ளானதும், காரில் இருந்து இறங்கிய மென்டிஸ் அந்த நபரை கவனித்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் ஏற்பாடுகளை செய்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றதாகவும், மீண்டும் 1 மணித்தியாலயம் கழித்து அங்கு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here