மெக்சிக்கோவில் தலைவிரித்தாடும் கொரோனா: உயிரிழப்பு 30,000 ஐ கடந்தது!

மெக்சிகோவில் கொரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 30,000 ஐ கடந்துள்ளது. தற்போது, பலி எண்ணிக்கையில் பிரான்சைக் கடந்து 5 ஆம் இடத்தில் உள்ளது.

சனிக்கிழமையன்று மட்டும் 523 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனையடுத்து பலி எண்ணிக்கை 30,366 ஆக அதிகரித்துள்ளது. மெக்சிகோவின் ஒரேநாள் பாதிப்பு 6000த்திற்கும் அதிகமாகி மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 251,165 ஆக உள்ளது. இதன் மூலம் ஸ்பெயினுக்குச் சமமாக 8 ஆம் இடத்தில் உள்ளது.

அங்கு லொக்டவுன் உள்ளதால் தெருவில் வந்து விற்பனை செய்பவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட 200 விற்பனையாளர்கள் வீதி மறியலில் ஈடுபட்டனர். தாங்கள் மீண்டும் விற்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

மார்ச் மாதம் முதலே கடைத்தெரு கடைகள், வியாபாரங்கள், பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் போராட்டத்தில் குதித்த 200 கடைத்தெரு வியாபாரிகள் தங்களால் இனி லொக்டவுனைத் தாங்க முடியாது என்றும் வேலையின்மைக்கான காப்பீடு உள்ளிட்ட வசதிகள் தங்களுக்கு இல்லை என்றும் கோஷமிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here