நாளை பாடசாலைகள் ஆரம்பிக்கவுள்ள நிலையில் மாணவி எடுத்த விபரீத முடிவு!

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அருளக சிறுவர் இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,

நாளையதினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தப் பணிகள் இல்லத்தினால் இன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது குறித்த மாணவியை நீண்ட நேரம் காணாத நிலையில் இல்லத்தில் இருந்தவர்கள் அவரை தேடியுள்ளனர்.

இதன்போது விடுதியின் முதலாவது மாடியில் அமைந்துள்ள கழிவறையில் மாணவி தூக்கில்தொங்கிய நிலையில் சடலமாக இருப்பது அவதானிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி மானவடு தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

சம்பவத்தில் ராயி செல்வராணி (17) என்ற மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் வவுனியா கோவில்புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்று வருவதுடன், இவ்வருடம் இடம்பெறவிருந்த க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றவிருந்தமை குறிப்பிடதக்கது.

இவர் 2016ஆம் ஆண்டு வவுனியா நீதிமன்றமூடாக குறித்த இல்லத்தில் சேர்க்கப்பட்டிருந்தார். இங்கு 107 பெண்பிள்ளைகள் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here