யாழில் ஒருவர் கொலை!

யாழ்.நீர்வேலி பகுதியில் நடந்த மோதலில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரு நபர்களுக்கு இடையில் இருந்த முரண்பாடு, கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர்.

இச் சம்பவத்தில் படுகாயமடைந்த செல்வநாயகம் ஜெயசிறி என்பவர் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்திய சாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், உயிரிழந்த நபரை தாக்கியவரை கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here