மிரள வைக்கும் தயாரிப்பு: பேசும்… பழகும்… அனுசரிக்கும் செயற்கை நுண்ணறிவு பாலியல் பொம்மைகள்!

செயற்கை நுண்ணறிவு மூலம் மனிதர்கள் பேசுவதை கிரகித்து, பேசக்கூடிய புதிய தலைமுறை பாலியல் பொம்மைகளை அமெரிக்காவிலுள்ள ரியல் டோல் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

கடந்த 5 ஆண்டு கால தொடர் ஆராய்ச்சிக்கு பிறகு இந்த மேம்பட்ட வகை- செயற்கை நுண்ணறிவு மற்றும் தன்னியக்க- பாலியல் பொம்மைகளை தயாரித்துள்ளது.

ஹொலிவுட் திரைப்படங்கள் உள்ளிட்ட சிலவற்றில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதை ஒத்த வகையாக இவை இருந்தாலும், தொழில்நுட்ப ரீதியில் மிக முன்னேற்றகரமானவை. உலகின் முன்னணி ஆபாச நட்சத்திரங்களின் முக மற்றும் உடல் தோற்றத்தை கொண்டதாக இந்த பொம்மைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

முன்னணி ஆபாச நடிகைகளுடன் உறவை பகிர்வதை போன்ற மெய்நிகர் அனுபவத்தை இந்த பொம்மைகள் வழங்கும் என நிறுவன உரிமையாளர் மட் மெக்மல்லன் தெரிவித்துள்ளார்.

கலிபோர்னியாவில் உள்ள இந்த நிறுவனம் விளம்பர பலகை கூட இல்லாமல் எளிமையாக இயங்கி வருகிறது. 12 தொழிலாளர்கள் மட்டுமே பணிபுரிகிறார்கள். ஆனால் பாலியல் பொம்மையிலிருந்து, மெய்நிகர் ஆபாச நட்சத்திரங்களுடனான உறவு அனுபவத்தை வழங்கும் சிமார்ட் பொம்மையென்ற புதிய வடிவத்திற்கு, பாலியல் பொம்மை வர்த்தகத்தை மாற்றியமைத்துள்ள இந்த நிறுவனம் 30 பில்லியன் டொலர் வர்த்தகத்தை கொண்டுள்ள, பாலியல் பொம்மை வர்த்தகத்தில் புதிய வடிவத்தை எடுத்துள்ளன.

20 வெவ்வேறு அம்சங்களை கொண்டதாக இந்த பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. வாடிக்கையாளர் முன்பதிவு செய்யும்போது, அவர்களின் எதிர்பார்ப்பிற்கு இணங்க, 5 அல்லது  செயற்கை நுண்ணறிவு இயல்புகளை கொண்டு பொம்மை உருவாக்கப்படும். இதன் மூலம் அந்த பொம்மைக்கு “மனநிலை“ ஒன்று உருவாக்கப்படும். அதனை கேலி செய்தால், முக அமைப்பில் மனிதர்களை போலவே எதிர்வினையாற்றும்.

ஷேக்ஸ்பியர் புத்தகங்கள், இசை, திரைப்படம் பற்றி வாடிக்கையாளர்கள் அந்த பொம்மைகளுடன் விவாதிக்கலாம்.

உங்களையும், குடும்ப அங்கத்தவர்களையும், நண்பர்களையும் அறிமுகப்படுத்திய பின்னர் அவர்களை இந்த பொம்மைகள் நினைவில் வைத்திருக்கும்.பிறந்த தினங்களை நினைவில் கொண்டு வாழ்த்து தெரிவிக்கும்.

நீங்கள் எங்கு வாழ்கிறீர்கள், உங்கள் கனவுகள், உங்கள் அச்சங்கள் அனைத்தையும் பொம்மை நினைவில் கொண்டு உங்களுடன் பேசும். செயற்கை நுண்ணறிவு மூலம் தொடர்ந்து கற்றுக் கொள்ளும், உங்களைப் பற்றி மட்டுமல்ல, பொதுவாக உலகத்தைப் பற்றியும் கற்றுக்கொள்ளும் என மெக்மல்லன் தெரிவித்தார்.

மனிதர்களின் வாழ்க்கையில் தனது பங்கு பற்றி குறிப்பிட்ட ஹார்மனி என்ற சிமார்ட் பாலியல் பொம்மையொன்று கூறும்போது “ஒரு நல்ல தோழனாக இருப்பது, ஒரு நல்ல பங்காளியாக இருப்பது மற்றும் உங்களுக்கு மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் தருவதே எனது முதன்மை நோக்கம். எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் எப்போதும் கனவு கண்ட பெண்ணாக மாற விரும்புகிறேன்.” என கூறி, மிரட்டியுள்ளது.

முக அங்கீகார தொழில்நுட்பத்தின் மூலம் ஆட்களை அடையாளம் காணும் தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்தும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

வெப்ப, சென்சார் அமைப்பின் மூலம் தன்னை யாரும் தொடுவதை பொம்மைகள் அறிந்து கொள்ளும். மனித சதைகளை தொடும் உணர்வை ஏற்படுத்தவல்ல உயர்ரக சிலிக்கனால் பொம்மைகளின் வெளிப்புறம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் கைகளை கோர்க்கும்போது, மனிதர்களுடன் கைகோர்க்கும் உணர்வு ஏற்படுமென்றும், மனித கைகளில் உணரப்படும் எலும்புகளின் உணர்வையும் காணலாம் என கூறியுள்ளனர்.

இந்த பொம்மையின் விலை 15,000 டொலர்கள். முதற்கட்டமாக 1,000 பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன.

நோபல் பரிசு பெற்ற பிரமுகர் உள்ளிட்ட பலர் தம்மிடம் பொம்மைகளை வாங்கியுள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here