யாழில் வீதியால் சென்ற மூதாட்டிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

கொக்குவில் பொற்பதி பகுதியில் வீதியால் சென்ற வயோதிப பெண்ணிடமிருந்து 9 பவுன் தாலிக்கொடி திருடர்களால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

கொக்குவில் பொற்பதி பகுதியில் தனியாக வீதியால் பயணித்த வயோதிகப் பெண்மணி ஒருவரிடம் அவரை பின்தொடர்ந்து வந்த இரு மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் பெறுமதியுடைய தாலிக்கொடியை அறுத்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here