மட்டக்களப்பு புன்னச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் ஆரம்பம்

மட்டக்களப்பு புன்னச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவ விழா ஆலயத்தின் திருக்கதவு திறத்தலுடன் நாளை (05) ஆரம்பமாகவுள்ளது.

ஜூலை 05 ஆந்திகதி ஆரம்பமாகும் சடங்கு உற்சவம் எதிர்வரும் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தீமிதிப்பு நிகழ்வுடன் நிறைவு பெறவுள்ளது.

மேலும் இவ்வருடம் கொரோனா தொற்று அசாதாரன சூழ்நிலை காரணமாக அம்மன் தீமிதிப்பு நேர்த்திக்கடனை மேற்கொள்வதற்கு பக்தர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என்பதை ஆதிசக்தி அடியார்களுக்கு ஆலய நிர்வாகம் பணிவுடக் தெரிவித்துக் கொள்வதுடன் பக்தர்கள் தங்கள் தீமிதிப்பு நேர்த்திக்கடன்களை அடுத்த வருடம் நிறைவேற்றிக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதவிர கொரோனா தொற்று தடுப்பு சுகாதார வழிமுறைகளைப் பேணி அடியார்கள் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவ பூசை நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறும், இந்நிகழ்வுகள் இனிதே நடைபெற தங்களது பூரண ஒத்துளைப்புகளை வழங்குமாறும் ஆலய பரிபாலனை நிறுவாகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here