தமிழர்களையும் என்னையும் பிரிக்க முனைந்தார்கள்… எமது கட்சியிலிருந்தும் ஒரு தமிழரை எம்.பியாக்குங்கள்: ரிஷாத்!

இந்த மண்ணில் தமிழ் பேசுகின்ற மக்கள் நிரந்தரமாக ஒற்றுமையாக வாழ வேண்டும். அவ்வாறு கடந்த காலங்களிலே தமிழ்ச் சமூகத்தையும் என்னையும் பிரித்து அரசியல் செய்த பலர் இருந்தார்கள். எனக்கெதிராக தமிழ்ச் சமுதாயத்தை சீண்டி விட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

இந்த மண்ணிலே தமிழ் பேசுகின்ற மக்களாகிய நாம் நிரந்தரமாக ஒற்றுமையாக வாழ வேண்டும். அவ்வாறு கடந்த காலங்களிலே தமிழ்ச் சமூகத்தையும் என்னையும் பிரித்து அரசியல் செய்த பலர் இருந்தார்கள். எனக்கெதிராக தமிழ்ச் சமுதாயத்தை சீண்டி விட்டார்கள்.

அவ்வாறு எல்லாம் செய்த பொழுதும் நாங்கள் பின் வாங்காமல் அந்த மக்களை கருணை உள்ளத்தோடு கருணை கொண்டு நாங்கள் பார்த்தோம்.

அவர்களுக்கான உதவிகளை செய்தோம். அதனுடைய விளைவு தான் கடந்த மாந்தை மேற்கு பிரதேசசபையில் 13 தொகுதிகளில் 11 தொகுதிகளை அந்த மக்கள் நமக்குத்தந்தார்கள்.

அதே போல மாந்தை கிழக்கு முல்லைத்தீவில் ஒரு இந்து சகோதரரை தவிசாளராக தந்தார்கள். கத்தோலிக்க சகோதரரை மாந்தை மேற்கில் தவிசாளராக தந்தார்கள்.

அதே போல் நானாட்டானில் எங்களுக்கு அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் கிடைத்த போது டொஸ்சில் இல்லாமல் போனது. அடுத்த பாராளுமன்றத்தில் ஒரு தமிழ் மகனும் என் கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினராக வருகின்ற போது தான் இந்த நாட்டிலே நமக்கு எதிராக நம்மை இனவாதி, மதவாதி என்று சொல்கின்றவர்களுக்கு நல்லதொரு பதிலை கொடுக்கின்ற சந்தர்ப்பமாக அமையும் என்பதை உணர்ந்து கொண்டு புத்தி சாதுரியமாக நடந்து கொள்ளுங்கள்.

இந்த தருணத்திலே ஒரு வாக்காவது சிதறி பின்னால் வேறு அணிகளுக்கு சென்று விடக்கூடாது. யாராவது இந்த ஊரில் அவ்வாறு இருந்தால் தயவு செய்து பள்ளி நிர்வாகம், ஊர் நிர்வாகம், கமக்கார அமைப்பு, இளைஞர் அமைப்பு, மகளிர் அமைப்பு ஒன்றுபட்டு யதார்த்தத்தை சொல்லுங்கள்.

தேசிய ரீதியாக எமது சமூகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை சொல்லூங்கள். இவற்றுக்கு எல்லாம் தீர்வுதான் எமது சின்னம் வெற்றி பெற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here