உயிரை மாய்த்த இளம் யுவதி… ஆவணங்களில் மாற்றம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

மட்டக்களப்பில் உயிரை மாய்த்த இளம் யுவதியின் மரணச் சான்றிதழில் மாற்றம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விவகாரத்தில் அதிகாரிகள் யாரும் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்ற விசாரணையும் நடந்து வருகிறது.

களுதாவளையை சேர்ந்த அரச உத்தியோகத்தரான இளம் யுவதியொருவர் கடந்த சில மாதங்களின் முன்னர்- கொரோனா ஊரடங்கு சமயத்தில்- வீட்டில் உயிரை மாய்த்திருந்தார். திருமண விவகாரமொன்றினால் அவர் உயிரை மாய்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது உடலை பரிசோதித்த மரண விசாரணை அதிகாரி, அது தற்கொலையென உறுதி செய்து, மரணச்சான்றிதழ் வழங்கினார்.

இந்த நிலையில், அந்த மரணச்சான்றிதழில் மாற்றம் செய்யப்பட்டு, அது விபத்து மரணம் என திருத்தம் செய்யப்பட்ட போலி மரணச்சான்றிதழ் தயாரிக்கப்பட்டு, நீதிமன்ற ஆவணங்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த யுவதியின் குடும்பம் வறுமையானது, வயோதிப பெற்றோர்கள் மற்றும் உறவினர் தங்கியுள்ள அந்த குடும்பத்தின் வாழ்வாதார தேவைகளை யுவதியே கவனித்து வந்த நிலையில், அவர் உயிரை மாய்த்துள்ளார். அவரது ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ளவே இந்த ஆவண மாற்றம் இடம்பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

ஆசிரியர் ஒருவரே ஆவண மாற்றத்தின் சூத்திரதாரியென கூறப்படுகிறது.

இது குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பதிவாளர் நாயகத்திற்கு அடுத்த வாரத்தில் இது குறித்து அறிவித்து, ஆவணத்தை சரிசெய்ய அடுத்த வாரத்தில் நீதிமன்றம் நடவடிக்கையெடுக்கும் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here