சஹானாவை பாராட்டிய ரஹ்மான்!

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில், லலித்குமார் தயாரிக்க, விக்ரம் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள கோப்ரா படத்தின், ‘தும்பி துள்ளல்’ பாடல் சமீபத்தில் வெளியானது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்பாடல் தற்போது 30 இலட்சம் பார்வையாளர்களை கடந்து, பாராட்டுகளை பெற்று வருகிறது.

இந்நிலையில், பார்வையற்ற மாற்றுத்திறனாளியான சிறுமி சஹானா “தும்பி துள்ளல்“ பாடலை கீ போர்டில் வாசித்து ருவிட்டரில் பகிர்ந்தார். இதை கவனித்த ஏ.ஆர்.ரஹ்மான், அவருக்கு பாராட்டு தெரிவித்தார்.

மேலும், தயாரிப்பாளர் லலித்குமார், சிறுமிக்கு மைக் உள்ளிட்ட ஸ்டுடியோ செட் அப்பை பரிசாக கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here